செய்துங்கநல்லூர் நூலகத்துக்கு கூடுதல் கட்டிடம் வேண்டும் என வாசகர் வட்ட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செய்துங்கநல்லூர் நூலகத்தில் வாசகர் வட்ட கூட்டம் நடந்தது. வாசகர் வட்ட தலைவர் திருமலை நம்பி தலைமை வகித்தார். தொலை தொடர்பு துறை ஓய்வு முத்துசாமி, மணக்கரை போஸ்ட மாஸ்டர் காளிமுத்து, ஓய்வு பெற்ற தபால் காரர் செல்லப்பா, ஓய்வு பெற்ற ரயில்வே நிலைய அதிகாரி இராசேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுக்குழு உறுப்பினர் கோபால கிருஷ்ணன் வரவேற்றார். முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய், சோம்நாத் சட்டர்ஜி ஆகியோர் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
செய்துங்கநல்லூர் நூலகத்துக்கு கூடுதல் கட்டிடம், மற்றும் பழைய கட்டிடத்தினை பழுது பார்க்க வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் வேம்புதுரை, விரிவுரையாளர் சிவராமன், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உள்பட பலர் கலந்து கொண்டனர். நூலகர் துரை ராஜ் நன்றி கூறினார்.