செய்துங்கநல்லூரில் நாளை (24.05.2018) 24 ந்தேதி தூத்துக்குடி சம்பவத்தினை கண்டித்து ஒரு நாள் கடையடைப்பு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து செய்துங்கநல்லூர் வியாபாரிகள் சங்க தலைவர் அய்யாகுட்டி, செயலாளர் பிச்சை பூபாலராயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் கடையடைப்பு நடத்த முடிவெடுத்துள்ள நிலையில் நமது சங்கமும் கடையடைப்பு செய்ய முடிவு செய்துள்ளது அதன்படி இன்று வியாழக்கிழமை அன்று ஒருநாள் கடையடைப்பு நடத்திட ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக் கொள்கிறோம். காலை 11 மணிக்கு வெங்கடேஷ்வரா மகாலில் நடைபெறும் வங்கி பொதுக்குழுவில் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படும் என தெரிவித்தார்.