செய்துங்கநல்லூரில் டி.டி.வி. தினகரன் சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா நடந்தது.
கருங்குளம் ஒன்றிய செயலாளர் சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தார். ஒன்றிய துணை செயலாளர் முத்தையா முன்னிலை வகித்தார். ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது. மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளர் ஓ.பி.எம்.முஸ்தபா, ஊராட்சி கழக செயலாளர் திருவரங்கம், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பூல்பாண்டி, ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் மாரியப்பன், பொதுக்குழு கொம்பையா, ராஜபாண்டியன், பட்டி வண்டிமலையான், வேம்புதுரை, மருதவிநாயகம், தூதுக்குழி முத்தையா, மருதவிநாயகம், பொந்தன் பொழி மாயாண்டி, வி.கோவில்பத்து மந்திரம், ஐயப்பன், செல்லப்பா, முத்தாலங்குறிச்சி பார்வதிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.