செய்துங்கநல்லூரில் தினகரன் அணி சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா நடந்தது. எம்.ஜி.ஆர் படத்துக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது. கருங்குளம் ஒன்றிய செயலாளர் சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட எம்ஜி.ஆர் அணி திருவரங்கம், சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் ஒ.பி.முஸ்தபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பந்தல்துரை, செல்லப்பா, முத்தையா, குமார், அப்பாத்துரை, தர்மராஜ், மருதநாயகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


