
தினகரன் குழுமமான ஆன்மிக பலனில் நான் (முத்தாலங்குறிச்சி காமராசு) தொடராக எழுதிய ‘ஜமீன்கோயில்கள்’ என்னும் தொடர் நூலாக வெளிவந்து விட்டது. தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து தினகரன் அலுவலகத்திலும் இந்த நூல் கிடைக்கிறது. அருமையான கட்டமைப்பு. விலை 140 ரூபாய். இந்த நூலில் நான் முந்தைய நூல்களில் எழுதாத அபூர்வ தகவலை திரட்டி எழுதியுள்ளேன்.
குறிப்பாக நட்டாத்தி ஜமீன், சாத்தான்குளம் ஜமீன், சிங்கம்பட்டி ஜமீன், ஊத்துமலை ஜமீன், குளத்தூர் ஜமீன், சிவகிரி ஜமீன், சுரண்டை ஜமீன், கடம்பூர் ஜமீன், பாஞ்சாலங்குறிச்சி ஜமீன், தலைவன் கோட்டை ஜமீன், சேத்தூர் ஜமீன், கொல்லங்கொண்டான் ஜமீன், சாப்டூர் ஜமீன், ஊர்காடு ஜமீன் ஆகிய 14 ஜமீன்தார்கள் வணங்கிய அவரது வாரிசுகள், வணங்கி கொண்டிருந்த கோயில்களை குறித்து இந்த நூலில் தொகுத்துள்ளேன்.
இந்த நூலுக்கு அட்டை படம் திரு.ஸ்யாம் அவர்கள் வரைந்துள்ளார்கள். கடந்த 25.09.1991 ல் தேவி வார இதழில் நான் எழுதிய ‘அம்பது ரூபாய் நோட்டு’ என்னும் சிறுகதைக்கு ஸ்யாம் அவர்கள் படம் வரைந்து இருந்தார்கள். அதன் பிறகு 26 வருடம் கழித்து மீண்டும் அவர் என் நூலுக்கு படம் வரைந்து இருப்பது எனக்கு சந்தோஷத்தினை தருகிறது.
இந்த சந்தோஷம் எனக்கு கிடைக்க காரணமாக இருந்த சூரியன் பதிப்பகம் பதிப்பாளர் மற்றும் ஆசிரியர் அய்யா ஆர்.எம். ஆர். ரமேஷ் அவர்களுக்கும், தொடர் எழுதி நூலாக்க ஆவண செய்த அய்யா பிரபு சங்கர் அவர்களுக்கும், அய்யா கே.என்.சிவராமன் அவர்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் நன்றி.
இந்த நூல் வேண்டுவோர் 04442209191 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு நூலை பெற்றுக்கொள்ளலாம். ரூ 165 ரூபாய் மணியார்டரில் சூரியன் பதிப்பகம், 229 கச்சேரி ரோடு, மயிலாபூர், சென்னை &600004 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பணம் அனுப்பினால், நூலை உங்கள் விலாசத்திலேயே பெற்று கொள்ளலாம்.
ஐந்து நூலுக்கு மேல் வாங்குபவர்கள் 25 சதவீதம் கழிவு விலையில் நேரில் நெல்லை தெற்கு பைபாஸ்ரோடு தினகரன் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். தமிழகத்தில் உள்ள அனைத்து தினகரன் ஏஜெண்ட்டுகளை தொடர்பு கொண்டாலும் இந்த நூல் உங்களுக்கு எளிதாக கிடைக்கும்.
நெல்லையில் புத்தக தேவைக்கு 9944206110 என்ற எண்ணில் திரு. முத்துராமன் அவர்களிடம் பேசுங்கள்.
நன்றி… தெடர்ந்து ஆதரவு தாருங்கள். நூலை வாங்கி கருத்துக்களை பதிவு செய்யுங்கள்