
சென்னையில் பிரபல ரவுடிகள் பிறந்தநாள்விழா லாரி செட் உரிமையாளர் வேல் (எ) வேல்முருகன் ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
சென்னை மாங்காடு அருகே உள்ள மலையம்பாக்கத்தில் அப்பகுதியை சேர்ந்த வேலு என்ற வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான லாரி ஷெட்டில் சூளைமேட்டை சேர்ந்த ரவுடி பினு தனது கூட்டாளிகள் 100 பேருடன் கடந்த 6-ம் தேதி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினான். இதுபற்றி தகவல் கிடைத்ததும் அந்த இடத்தை சுற்றி வளைத்த போலீசார், கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் திரண்டிருந்த 75 ரவுடிகளை மடக்கி பிடித்து கைது செய்தனர். ஆனால் ரவுடி பினு, தனது கூட்டாளிகள் சிலருடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். அவர்களை பிடிக்க போலிசார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது.
நேற்று காலை என்கவுண்டருக்கு பயந்த பினு சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்நிலையில் இன்று காலை ரவுடிகள் பிறந்தநாள் கொண்டாடிய வழக்கில் தேடப்பட்டு வந்த லாரி ஷெட்டின் உரிமையாளரான வேலு என்ற வேல்முருகன் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் நநீதித்துறை நடுவர்நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
அவர் தனக்கும் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்திற்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என தெரிவித்தார். அதன்பின் இந்த வழக்கை விசாரித்த வேல்முருகனை 23ம் தேதி ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் அதுவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி முருகன் உத்தரவிட்டார். அதன்படி ஸ்ரீவைகுண்டம் போலிசார் வேல்முருகனை பாளை மத்தியசிறைச் சாலையில் கொண்டு அடைத்தனர்.