சாத்தான்குளம் அருகே பொத்தகாலன்விளையில் செயல்பட்டு வரும் சாஸ்தாவிநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வாடிக்கையாளர் பாதுகாப்பு பெட்டகம் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு சங்கத் தலைவர்சூசைசெசன்ராஜ் தலைமை வகித்தார். சங்கச் செயலர் ராஜகுமார் வரவேற்றார். வாடிக்கையாளர் பாதுகாப்பு பெட்டகத்தின் முதல் சாவியை சங்க உறுப்பினர் அந்தோணி செல்வராணியிடம் தலைவர் சூசைசெசன்ராஜ் வழங்கினார்.
விழாவில் சங்க துணைத்தலைவர் ரவிச்சந்திரன், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் இருதயராஜ், அருள்ராஜ், திருக்கல்யாணி உள்ளிட்ட சங்க பணியாளர்கள், சங்க வாடிக்கையாளர்கள் பங்கேற்றனர்.