சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 69வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு பள்ளித் தாளாளரும் முதல்வருமான நோபுள்ராஜ் தலைமை வகித்து தேசிய கொடி ஏற்றினார். தலைமையாசிரியர் பங்கராஸ் வரவேற்றார். பள்ளி மாணவர் தலைவர் இசக்கித்துரை கொடி வணக்க நிகழ்ச்சியை நடத்தினார். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சிகளை ஆசிரியை சிபி தொகுத்து வழங்கினார். துணை முதல்வர் சந்தணக்குமார் நன்றி கூறினார்.
சாத்தான்குளம் ராம.கோபால கிருஷ்ணப் பிள்ளை அரசுக் கிளை நூலகத்தில் 69 ஆவது குடியரசு நாள் விழா நடந்தது.விழாவுக்கு வாசகர் வட்டத் தலைவர் நடராசன் தலைமை வகித்து கொடியேற்றினார்.இவ்விழாவில் பாரதி கலை இலக்கிய பேரவை தலைவர் ஈஸ்வர்சுப்பையா, டாக்டர் ராய், ஓய்வுபெற்ற ஆசிரியர் ஜாண்லூயிஸ்,யோகா ஆசிரியை ராஜலெட்சுமிசிவபாலன் ஆகியோர் பேசினர்.இதில் ஓய்வு பெற்ற பள்ளி எழுத்தர் பிரேம்குமார்,லெனின்முருகன்,யோகா ஆசிரியை கமலம் மற்றும் வாசகர்கள், செல்வராஜ்,சங்கரநாராயணன், நூலகப் பணியாளர்கள் லட்சுமி,சுசி,நூலக உதவியாளர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.நூலகர் சித்திரை லிங்கம் நன்றி கூறினார்.