சாத்தான்குளம் பகுதியில், நடப்பு ஆண்டில் வேளாண்மைத்துறை மூலம் செயல்பட்டு வரும் வேளாண்மை திட்டப் பணிகளை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ஆய்வு மேற்கொண்டார்.
சாத்தான்குளம் வட்டாரத்தில் நடப்பு ஆண்டில் வேளாண்மைத்துறை மூலம் பல்வேறுதிட்டப்பணிகள் செயல்பட்டு வருகிறது. வேளாண்மை திட்டப்பணிகளை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் மு.சு.நா. செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
அவர், மத்திய அரசின் என்எம்ஒஒபி- டிபிஒ திட்டத்தின் கீழ் வேப்பங்கன்றுகள் நடவு மற்றும் அவற்றில் கடலை ஊடுப்பயிர் சாகுபடி செய்துள்ள பன்னம்பாறை விவசாயி சண்முகசுந்தரம் தோட்டத்துக்கு சென்று பார்வையிட்டார். பின்னர் நிலக்கடலை விதைப்பண்ணை வயலிலுக்கு சென்று, விதைப்பண்ணையை பார்வையிட்டு அதிக மகசூல் எடுக்கக் கூடிய தொழில்நுட்பங்களையும், அதன் வழிமுறைகளையும் எடுத்துரைத்தார்.
மேலும் பல்வேறு விவசாயிகளின் தோட்டத்துக்கு சென்று செயல்படுத்தப்பட்டுள்ள வேளாண் திட்டங்களை பார்வையிட்டார்.
ஆய்வின்போது, சாத்தான்குளம் வேளாண்மை உதவி இயக்குநர் ஆ. சரஸ்வதி, வேளாண்மை அலுவலர் க. அல்லிலிராணி, உதவி வேளாண்மை அலுவலர்கள் கோபாலகிருஷ்ணன், சிவராம் ஆகியோர் உடனிருந்தனர்