சாத்தான்குளம் சுற்றுவட்டாரப்பகுதியில் 100க்கும் மேற்பட்டோ£ருக்கு மர்மக்காய்ச்சல் உள்ளது. இதனால் சாத்தான்குளத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வருகின்றவர்களை மருத்துவமனை ஊழியர்களும், செவிலியர்களும் மனம் நோகும்படி நடப்பதால் நோயாளிகள் விரக்தியடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சுற்றி புத்தன்தருவை, படுக்கப்பத்து, தட்டார்மடம், சடையன்கிணறு, பாலத்தூர், புதுக்குளம், நல்லூர், வெங்கட்ராயபுரம் உள்பட 40க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இந்த 40க்கும் மேற்பட்ட ஊர்களுக்கும் 3 துணை சுகாதார நிலையம் மட்டுமே உள்ளது. இதற்கு தலைமையிடமாக சாத்தான்குளம் அரசு மருத்துவமனை உள்ளது.
சாத்தான்குளத்தை சுற்றியுள்ள 38க்கும் மேற்பட்ட கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்டோருக்கு மர்ம காய்ச்சல் உள்ளது. இதனால் அச்சமடைந்த மக்கள் துணை சுகாதார நிலையத்தை நாடினர். ஆனால் அங்கு அவர்கள் மாத்திரை மருந்துகளை கொடுத்து அனுப்பி விடுகின்றனர். ஆனால் காய்ச்சல் சரவர குணமாகத காரணத்தால் தற்போது பொதுமக்கள் அனைவரும் சாத்தான்குளத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு படையெடுத்துள்ளனர்.
ஆனால் அங்கு வரும் பொதுமக்களுக்கும், நோயாளிகளுக்கும் முறையாக சிகிச்சை அளிக்கப்படவில்லை. மாறாக மருத்துவர்கள் தனியாக கிளினிக் நடத்தி வருவதால் மருத்துவமனைக்கு சரிவர வருவதில்லை. மேலும் குறைவான அளவிலேயே மருத்துவர்களும், செவிலியர்களும், ஊழியர்களும் உள்ளனர். வருகின்ற முதியவர்கள் மற்றும் நோயாளிகளளை செவிலியர்களை தரக்குறைவான வார்த்தைகளால் பேசுகின்றனர். இதனால் மனமுடைந்துள்ளனர் நோயாளிகள். மேலும் வரும் நோயாளிகளை இங்கு முறையாக சிகிச்சை செய்யாமல் 108 மற்றும் ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி, திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர். இன்று மட்டும் சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு வந்த 10க்கும் மேற்பட்ட நோயாளிகளை 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடிக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் நோயாளிகளுடன் வருபவர்களை 108 ஆம்புலன்ஸில் ஏற்ற மறுக்கின்றனர். இதனால் உடன் வருபவர்கள் தனியான பேருந்தில் ஏறி தூத்துக்குடி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளிகளும் அவர்களுடைய உறவினர்களும் அலைச்சலுக்கு உள்ளாகின்றனர்.
40க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கிய இந்த சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அதிக மருத்துவர்களும், செவிலியர்களும் இல்லாத காரணத்தால் தான் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே அரசு இதனை கருத்தில் கொண்டு சாத்தான்குளம் மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நியமித்து காய்ச்சல் மற்றும் நோய்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.