
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஒன்றியத்துக்குட்பட்ட சுப்பராயரபுரத்தில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் என்.வெங்கடேஷ் கலந்து கொண்டார். கிராமங்களில் அடிப்படை வசதிகள் மற்றும் விழிப்புணர்வு சம்பந்தமாக விவாதிக்கப்பட்டது. குளங்களை தூர்வாரும் பணி சம்பந்தமாக மற்றும் டெங்கு விழிப்புணர்வு பற்றியும் பேசப்பட்டது.
திறந்த வெளியில் மலம் கழிப்பது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் பொதுமக்களுக்கு பல்வேறு வகையான நலத்திட்ட உதவித்தொகை வழங்கப்பட்டது. பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் மனுக்களை பெற்றுக் கொண்டார். இதில் சாத்தான்குளம் வட்டாட்சியர் சேதுராமன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.