தூத்துக்குடி மாவட்டம் பேய்க்குளம் அருகிலுள்ள பெருமாள்குளத்தை சேர்ந்த சிவபெருமாள் மகள் பத்மா என்ற பத்திரகாளி (21). கடந்த 6 மாதத்திற்கு முன்பு அதே ஊரைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் மோகன்ராஜ் வேறு ஒரு பெண்ணிடம் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதனை மனைவி பத்திரகாளி கண்டித்துள்ளார். இதனால் மோகன்ராஜும் அவரது தாயாரும் சேர்ந்து 20 பவுண் நகை 1 இலட்சம் பணம் வாங்கிவிட்டு வா என வீட்டை விட்டு அடித்து விரட்டியுள்ளனர். இதனையடுத்து பத்திரகாளி தனது தாயார் வீட்டில் இருந்துள்ளார். வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரம் வீட்டிலிருந்த மண்ணெண்ணெய் உடம்பில் ஊற்றி தீக்குளித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து சாத்தான்குளம் போலிசார் கணவர் மோகன்ராஜ், கணவரின் சகோதரர் சீனிவாசன் ஆகியோரை கைது செய்தனர். இதுகுறித்து திருச்செந்தூர் ஆர்டிஓ விசாரனை நடத்தி வருகிறார்.
திருமணமான 6 மாதத்தில் இளபெண் வரதட்சனை கொடுமையால் தீகுளித்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.