தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகிலுள்ள வரிப்பிலான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயசிங்(48). எலக்ட்ரீசியனாக வேலை செய்து வரும் இவருக்கு ஜெனித்ரஞ்சித் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
இன்று காலை ஜெயசிங் சாத்தான்குளம் அருகிலுள்ள சிறப்பூரில் புதிதாக கட்டப்பட்ட ஒரு வீட்டிற்கு வயரிங் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அருகிலுள்ள வீட்டில் மின்கம்பத்திலிருந்து மின்சாரம் வரவில்லை என கூறியுள்ளார்கள். அந்த ஊரில் இரண்டு மின்மாற்றிகள் செயல்பாட்டில் உள்ளது. ஜெயசிங் என்பவர் ஒரு மின்மாற்றியை மட்டும் அணைத்து விட்டு மின்கம்பத்தில் ஏறிவேலை பார்த்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி கீழே தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரதுஉடல்பிரேதபரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசுமருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
=======