தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஞானியார்குடியிருப்பு விளக்கில் பாலக்குடத்து இசக்கியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் ஊரின் வெளிப்புறத்தில் உள்ளதால் நேற்று இரவு மர்ம நபர்கள் கோவிலின் முன்பக்க சுவரை துளையிட்டு உள்ளே சென்று உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்துள்ளனர். மேலும் கோவிலில் நகைகள் இல்லாததால் ஆத்திரமடைந்த திருடர்கள் அம்மனின் உடைகள் மற்றும் கோவிலில் உள்புறத்தில் தீயிட்டு கொளுத்திச் சென்றுள்ளனர்.
இன்று காலை அந்த வழியாகச் சென்றவர்கள் சுவர் துளையிட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து பார்த்தனர். அப்போது உண்டியல் உடைக்கப்பட்டு தீயிட்டு கொளுத்தப்பட்டிருந்தது. உடனே ஊர்பொதுமக்கள் சாத்தான்குளம் போலிசில் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து போலிசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
கோவிலில் நகை இல்லாததால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் கோவிலை தீயிட்டு கொளுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.