சாத்தான்குளத்தில் நெற்றிக்கண்ணுடன் காணப்பட்ட அதிசய தேங்காயை பொதுமக்கள் ஆவலுடன் பார்த்து சென்றனர்.
சாத்தான்குளம் அருகே உள்ள பள்ளங்கிணற்றைச் சேர்ந்த விவசாயி ஜெகன் (30) என்பவரது தென்னை மரத்தில் விளைந்த தேங்காய்களை காய்கனி கடைக்கு விற்பனைக்கு கொண்டு வந்தார். அதில் ஒரு தேங்காய் 3 கண்ணுடனும், அதன் நடுவில் ஒரு கண் என 4கண்கள் காணப்பட்டது. தற்போது பல தேங்காயில் 4கண் தேங்காய் சர்வசாதாரணமாக காணப்படும் நிலையில் மூன்று கண் மற்றும் நடுவில் நெற்றிக்கண் தோற்றத்துடன் தேங்காய் சாத்தான்குளத்தில் காணப்பட்டது.
மக்களிடம் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதனை பொதுமக்கள் பார்த்து சென்றனர்.