
சாத்தான்குளம் சுற்றுவட்டார பகுதியில் கடந்த வருடம் ஏற்பட்ட ஒக்கி புயல் காரணமாக பரவலாக மழை பெய்தது. இதனால் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 113 அடியாக உயர்ந்தது. இதனால் இப்பகுதி விவசாய மக்கள் மிகவும் மகிழ்ச்சியடையந்தனர். ஆனால் சில பொதுப்பணித்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட ஒரு தொகையை பெற்றுக்கொண்டு 1வது மற்றும் 2வது ரீச் பாசன குளங்களுக்கு மட்டுமே தண்ணீரை வழங்கி வருகின்றனர். 3வது மற்றும் 4வது ரீச் குளங்களுக்கு இதுவரை சிறிதளவு கூட தண்ணீரை வழங்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த இப்பகுதி விவசாய மக்கள் பலமுறை பல அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பல ஆர்ப்பாட்டங்கள் சாலைமறியல் விவசாயிகள் சார்பாக சாத்தான்குளம் சுற்றுவட்டார பகுதியில் நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. ஆனால் தமிழக அரசு இதனை கண்டுகொள்ளாமல் இருக்கிறது.
இன்று சாத்தான்குளம் பேருந்து நிலையம் அருகில் திருச்செந்தூர் தென்பகுதிவிவசாய சங்க சார்பில் மணிமுத்தாறு அணை 3வது மற்றும் 4வது ரீச் குளங்களுக்கு உடனடியாக தண்ணீரை வழங்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.