தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க அமைப்பு தின கூட்டம் சாத்தான்குளத்தில் நடைபெற்றது.
வட்டத் தலைவர் சிங்கராயர் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஐயாக்குட்டி முன்னிலை வகித்தார். வட்டச் செயலர் சுப்பையா வரவேற்றார். புதிய உறுப்பினர்கள் சாந்தராஜா, மணி, சுப்பிரமணி ஆகியோர் பேசினர்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வுகாண கருவூலக செயலர், கணக்கு துறை இணை இயக்குநர் ஆகியோரிடம் முறையிடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், சங்க நிர்வாகிகள் கணேசன், இஸ்ரவேல், ஐசக், ராஜலட்சுமி, உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சங்க இணைச் செயலர் பிரேம்குமார் நன்றி கூறினார்.