சாத்தான்குளத்தில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் 4ம்தேதி நடக்கிறது. சாத்தான்குளம் புதுவாழ்வு கிறிஸ்தவ விசுவாச ஐக்கிய சபை மாணிக்கவாசகபுரம் சார்பாக இலவச மருத்துவ பரிசோதனை முகாம் 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:30 மணிமுதல் 5:30 மணிவரை நடக்கிறது.
இதில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் கலந்து கொண்டு இரத்த அழுத்த நோய், சர்க்கரை நோய், சிறுநீரக பாதிப்பு, பல், கண் குறைபாடுகள், தசைபிடிப்புகள், உட்பட பல்வேறு வியாதிகளுக்கு இலவச பரிசோதனை செய்கின்றனர். இந்த முகாமில் மருத்துவ பரிசோதனை செய்யப்படுவதுடன் இலவச மருந்து மாத்திரைகளும் வழங்கப்படுகிறது.
தொடர்ந்து இரவு நற்செய்திகூட்டம் நடக்கிறது. பால் ஆண்ட்ரூ கனகராஜ் தேவசெய்தி அளிக்கிறார்.
விழா ஏற்பாடுகளை பாஸ்தர் அற்புதராஜ் மற்றும் புதுவாழ்வு கிறிஸ்தவ விசுவாச ஐக்கியசபையினர் செய்துள்ளனர்.