செய்துங்கநல்லூரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பாக 34 வது அமைப்பு தினம் கொண்டாடப்பட்டது.
மாவட்ட துணை தலைவர் ஆழிகுடி துரைப்பாண்டியன் தலைமை வகித்தார். செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். சங்க கொடியேற்றப்பட்டு, இனிப்பு வழங்கப்பட்டது. இந்தநிகழ்ச்சியில் பொருளாளர் காசிமணி, தணிக்கையாளர் சுப்பிரமணியன், பண்டாரம், தஸ் நேவிஸ், ஆறுமுகம், அன்னமரியாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.