கொங்கராயகுறிச்சியில் உள்ள சிவகாமி சமேத வீரபாண்டிஸ்வரர் ஆலயம் மிகவும் பழமையானது. இந்த கோயில் 1876ல் வந்த தாமிரபரணி ஆற்று வெள்ளத்தில் பூமிக்குள் மூழ்கி விட்டது. அதன் பின் பக்தர்கள் படிப்படியாக திருப்பணி செய்து இந்த ஆலயத்தினை வெளிக்கொண்டு வந்தனர். தற்போது இங்கு பூஜை முறையாக நடந்து வருகிறது.
இங்குள்ள சட்டநாதர் என்னும் பைவரர் மிகவும் சிறப்பு வாய்ந்தவர். இவரை வணங்க கேரள மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். அத்ரிமலையில் இருந்து கொடிமரம் இங்கு கொண்டு வந்து பிரதிட்சை செய்யப்பட்டுள்ளது.
ஆனால் எந்த திருப்பணியும் முழுமையாக நடைபெறவில்லை. எனவே தற்போது தூத்துக்குடி அப்பர் நற்பணி மன்ற உழவாரபணி சார்பில் திருப்பணி நடந்தது.
இதில் 50க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கலந்து கொண்டனர். இவர்கள் பெயர்ந்து கிடக்கும் கல்லை மீண்டும் நிலை நிறுத்துதல், வளாகத்தினை சுத்தப்படுத்துதல், வெள்ளை அடித்தல் போன்ற பணிகளை செய்தனர். இந்த பணியில், உச்சிமகாளி சுவாமி, மகாதேவ அய்யனார், ஸ்ரீனிவாச சிவா, ஆழ்வார்கற்குளம் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் துரை, காட்டுராஜன், உலகநாதன், ஓய்வு பெற்ற ராணுவவீரர் நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


