தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கொங்காராயகுறிச்சி கிளை சார்பில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ மாணவ-மாணவியர்களுக்கான ”சாதித்துக் காட்டுவோம்” என்ற தேர்வு வழிகாட்டி முகாம் கொங்கராயகுறிச்சி ஆனந்தா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
முகாமிற்கு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் சம்சுதீன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அஸாருதீன், பொருளாளர் சேக்முகம்மதுஅலி, துணைத்தலைவர் தமீம், துணைச்செயலாளர்கள் சிக்கந்தர், நாஸர், இமாம்பரீது, மருத்துவஅணி செயலாளர் ரஷீத்காமில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாணவரணி செயலாளர் ஷமீம் வரவேற்றார்.
முகாமினை ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷன் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு துவக்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, மாணவ, மாணவியர்கள் பாடங்களை புரிந்து படிப்பதுடன், பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்டு தெளிவுபெறவேண்டும். பொதுத்தேர்வுகளில் எடுக்கும் மதிப்பெண்கள் தான் நமது வருங்கால வாழ்வை நிர்ணயிக்கிறது என்பதை மாணவர்கள் உணர்ந்து கருத்துடன் படித்திடவேண்டும் என்றார்.

முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவியர்களுக்கு, கல்வியாளர்கள் உமர்பாரூக், அன்சார்அலி ஆகியோர் தேர்வுகளை எழுதும் வழிமுறைகள் குறித்து பாடத்திட்டங்களுடன் விளக்கம் அளித்தனர். இதில், மாவட்டம் முழுவதும் பல்வேறு பள்ளிகளையும் சேர்ந்த 10, 11, 12ம் வகுப்பு மாணவ, மாணவியர்கள் திரளாக பங்கேற்றனர். பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் தேர்வுக்கான பாடத்திட்டங்களின் கையேடுகள் இலவசமாக வழங்கப்பட்டது.
முகாமிற்கான ஏற்பாடுகளை கொங்கராயகுறிச்சி கிளை செயலாளர் மீரான், பொருளாளர் மன்சூர், துணைத்தலைவர் இஸ்மாயில், துணைச்செயலாளர் கலீல், மாணவரணி செயலாளர் அபுபக்கர் சித்தீக் மற்றும் நெல்லைஜங்சன் கிளை தலைவர் பீர்முஜிப் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில், மாணவரணி செயலாளர் ஷமீம் நன்றி கூறினார்.