தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஸ்ரீவெங்கடேஷ்வராபுரம் ஊராட்சியை நாளாளுமன்ற பேரவை உறுப்பினர் கனிமொழி தத்தெடுத்து தற்போது வரை 1 கோடி ரூபாய்க்கு மேலாக பல்வேறு நிதி வளர்ச்சி திட்டங்களை செய்துள்ளார்.
இந்நிலையில் இந்த பகுதியைச் சுற்றியுள்ள மீரான்குளம், கருங்கடல், கட்டாரிமங்கலம், கருவேலம்பாடு என பல கிராமங்கள் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து ஆயிரக்கணக்கான கல்வி பயில 15 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளதாகவும், அதற்காக எங்கள் பகுதியில் ஏழை குழந்தைகளின் ஆங்கில வழி கல்விக்காக மத்திய அரசின் கேந்திர வித்யாலயா கல்வி நிலையம் அமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அதனை அவர் நிறைவேற்றித் தருவதாகவும் உறுதியளித்தார்.
இதற்காக ஸ்ரீவெங்கடேஷ்வராபுரம் ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் கல்வி நிலையம் அமைக்க தமிழக அரசிற்கு இந்தபகுதியில் உள்ள தங்கள் நிலத்தை தானமாக வழங்கினார்கள். அதன்பின்னர் இந்த பகுதியில் கல்வி நிலையம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. ஆனால் இன்று வரை ஆகியும் மாநில அரசு அதற்கு அனுமதி மறுத்து வருகிறது.
இதனை கண்டித்தும், இந்த பகுதியில் கேந்திர வித்யாலயா கல்வி நிலையம் அமைக்க கோரியும் இந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் இன்று ஆசீர்வாதபுரம் தபால் அலுவலகத்தில் ஆளுனருக்கு தபால் மனு அனுப்பும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் ஆளுநருக்கு இதுகுறித்து தபால் மனு அனுப்பப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
====