தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழையில் இன்று குழந்தைகளை கடத்தும் வடமாநில பெண் பொதுமக்களிடம் மாட்டிக் கொண்டாள்.
பெண்கள் விரட்டி பிடிக்க முயன்ற பொது வடநாட்டு பெண் கத்தியை சூழற்றி மிரட்டியுள்ளார். பின்னர் மடக்கி பிடித்து கட்டிவைத்தனர். காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு குழந்தை கடத்த முயன்ற பெண்ணை காவல் துறையிடம் ஒப்படைக்கபட்டது. இதனால் பெரியதாழையில் பரபரப்பு ஏற்பட்டது.
காவல்துறையினரின் விசாரணையில் அந்த பெண் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் என்பது தெரியவந்தது.