தாமிரபரணி ஆற்றில் மகா புஷ்கர திருவிழா மிகச்சிறப்பாக நடந்து வருகிறது.
முறப்பநாடு குரு தீர்த்தக்கட்டத்தில் நேற்று மிக அதிகமான பக்தர்கள் நீராடினார்கள். சுமார் 65 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் நீராடினர். இதனால் போக்குவரத்து மிகவும் பாதிகப்பபட்டது. நாலுவழிச்சாலையில் முறப்பநாட்டில் இருந்து வல்லநாடு வரை வாகனங்கள் வரிசையில் நின்றது. இதை போலிசார் ஒழுங்கு படுத்தினர். மெயின்ரோட்டில் இருந்து ஆட்டோவில் பக்தர்கள் வரிசையாக ஏற்றப்பட்டு ஆற்றங்கரைக்கு கூட்டிச் செல்லப்பட்டனர். இங்கு வந்த மக்கள் இதற்கு இணையான தீர்த்தகட்டமான ஆழிகுடிக்கும் சென்றனர். எனவே அந்த பகுதியிலும் மிக அதிகமான பக்தர்கள் வந்துசென்றனர். சாதுசிதம்பர சுவாமிகளால் மிகவும் போற்றப்பட்ட நேசிக்கப்பட்ட இடம் அகரம் தாமிரபரணி நதிக்கரையோரம் அமைந்துள்ள தசவதார தீர்த்த கட்டம். காசிக்கு இணையாக வடதிசையிலிருந்து தெற்கு நோக்கி பாய்ந்து ஓடுகிறது. தாமிபரணி இந்த இடத்தை வல்லநாடு சுவாமிகள் தட்சனகங்கை என்று அழைப்பார்கள்.
தசவதார பெருமாள் கோவில் அமைந்துள்ள இந்த இடம் தாமிபரணி மகாத்மியம் என்ற வரலாறு புத்தகத்தில் தசவதார தீர்த்தக கட்டம் என்று அழைககப்படுகிறது. வல்லநாடு சாது சிதம்பர சுவாமிகள் அறக்கட்டளை மற்றும் தொண்டர் குலத்தின் சார்பாக நேற்று மாலை 3.00 மணியளவில் பாறைக்காடு அருள் ஆனந்த செந்தில் விநாயகர், பெருமாள் ஆலயத்திலிருந்து திருமஞ்சன அபிசேகபொருட்கள் புஷ்பங்களோடு நம் சன்மார்கக தொண்டர்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு தாமிரபரணி நதிக்கரையோரம் அமைந்துள்ள பந்தலில் அகவல் பாராயணம் முறையே சிவபுராணம் விநாயகர் அகவல் பாடல்கள் பாடி மாலை 6.00 மணியளவில் அன்னை தாமிரபரணி நதிக்கு அனைத்து அபிசேகமும் செய்து 6.45 மணியளவில் மங்கள ஆரத்தி தீபாரதனை செய்தனர்.
நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள கீழப்பாவூர் ஸ்ரீசாம்ராஜ்ய லட்சுமி நரசிம்மர் பீடத்தில் இருந்து அஞ்சேல் தசவாதர தீர்த்தகட்டத்தில் எழுந்தளிய மகா புஷ்கர விழா நடந்தது. இதில் ஏராளமான பகதர்கள் கலந்துகொண்டரன். இன்று கும்ப ராசிகாரர்கள் நீராடும் தினம் என்பதால் மிக அதிகமான பகதர்கள் முறப்பநாடு, ஆழிகுடி, கருங்குளம் பகுதிக்கு வந்த வன்னம் உள்ளனர்.