
கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி நாட்டுநலப் பணித்திட்டம் சார்பில் தண்ணீர்பந்தல் திறக்கப்பட்டது.
கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி முதல்வர் முனைவர் இராமலிங்கம் தலைமை வகித்தார். வேளாண்மைக் கல்லூரியின் பயிர் பெருக்கம் மற்றும் மரபியல் துறை தலைவர் முனைவர் ஆறுமுகம்பிள்ளை திறந்து வைத்தார். உழவியல் துறை தலைவர் முனைவர் இராமநாதன், கல்லூரி விடுதிகாப்பாளர் முனைவர் கண்ணன், கல்லூரி உடற்கல்வி இயக்குநர் முனைவர் பார்த்திபன், துணை விடுதிகாப்பாளர் முனைவர் இராமமூர்த்தி, வேளாண்மை கல்லூரி நாட்டு நல பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் ராஜாபாபு, முனைவர் சோபா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரியின் பண்ணை மேலாண்மைத் துறைத் தலைவர் முனைவர் வேலாயுதம், நாட்டுநலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் இராஜாபாபு ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.