செய்துங்கநல்லூரில் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டம் நடத்தினர்.
இதனால் இப்பகுதியில் அனைத்து கடைகளும் மூடப்பட்டது. அதன் பின் வியாபாரிகள் சமுதாய நலக்கூடத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர். கூட்டத்துக்கு சங்க தலைவர் அய்யாக்குட்டி தலைமை வகித்தார். உதவி செயலாளர் அய்யப்பன், பொருளாளர் ஜாகிர் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை பொருளாளர் பால்சாமி வரவேற்றார். காவேரி மேலாண்மை வாரியம் அமைத்து தராவிடில் மேலும் நடைபெறும் போராட்டங்களில் வியபாரிகள் சங்கம் கலந்துகொள்வது என்றும், செய்துங்கநல்லூரில் பொது கழிவறை அமைக்க வேண்டும், புதன் கிழமை நடைபெறும் சந்தையில் சாலையோரத்தில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளு-க்கு சந்தை விரிவாக்க செய்து இடம் தரவேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கௌரவ ஆலோசகர் சுடலைமணி, துணை தலைவர்கள் மந்திரம், ஜாகீர் உசேன், செயற்குழு உறுப்பினர்கள் சுப்பையா, தளவாய் செல்வன், கனகராஜ், பட்டுராஜ் உள்பட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.