தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரில் மகளிர் கூட்டமைப்பு மற்றும் பெண்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வளர்ச்சி மையம் சார்பில் உலக மகளிர்தின சிறப்பு விளையாட்டுப்போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது.
முதலூர் ஆதித்தனார் திடலில் நடந்த விளையாட்டுப் போட்டியை முதலூர் வட்டார மருத்துவ அலுவலர் சுமதி பாஸ்கர் துவக்கி வைத்தார். அதன்பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், தகப்பன் சொத்து மகனும் உண்டு மகளுக்கும் உண்டு என்று சட்டம் கொண்டு வந்தவர் கலைஞர் கருணாநிதி அவர்கள். அதன்பின்னர் தான் பெண்கள் வரலாறுகள் பல படைத்தார்கள். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.