கருங்குளம் அரசு மருத்துவ மனை டாக்டர் முகம்மது ரிபானுக்கு தமிழக அரசு சிறந்த டாக்டருக்கான விருதை சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் வழங்கினார்.
கருங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை கிராமபுற மருத்துவமனையாகும். இந்த மருத்துவமனை வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபட்டவர் டாக்டர் முஹம்மது ரிபான். இவர் மருத்துவ துறையில் சிறப்பாக பணியாற்றி வகைக்கு தமிழக அரசு விருது வழங்கி சிறப்பித்துள்ளது.
டாக்டர் முகம்மது ரிபான் 2011ஆம் ஆண்டு வல்லநாடு அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிய ஆரம்பித்தார். மயக்க மருந்து நிபுணராக தற்போது கருங்குளம் அரசு மருத்துவமனையில் கடந்த 6 வருடமாக பணியாற்றிவருகிறார். இதுவரை 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆபரேசனுக்கு மயக்க மருத்து கொடுத்துள்ளார். அறுவை சிகிச்சைமூலமாக குழந்தை பேறுகாலம் செய்யும் வசதி இவர் காலத்தில் தான் கருங்குளம் ஆஸ்பத்திரியில் திறக்கப்பட்டது. இந்த சேவையை பாராட்டி தமிழக அரசு விருது வழங்கியுள்ளது.
இந்த விருதை சென்னை கிண்டி எம்.ஜி.ஆர் பல்கலைகழக வாளகத்தில் வைத்து டாக்டர் முகம்மது ரிபான் பெற்றுகொண்டார். இதே போல் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆழ்வார்திருநகரி மருத்துவமனையில் டாக்டர் சாய் விஜயரோகிணி ஆகியோருக்கு தமிழக அரசு விருது வழங்கப்பட்டுள்ளது.