கருங்குளத்தில் விடுமுறை வேதாகம பயிற்சி நிறைவு விழா நடந்தது.
நம்பிக்கையின் பாலம் சார்பாக நடந்த நிகழ்ச்சிக்கு கலிங்கப்பட்டி விசுவாசிகளின் சபை போதகர் டேவிட்ராஜ் தலைமை வகித்தார். திட்ட மேலாளர் ஜெபராஜ் வரவேற்றார். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் ஜெயலட்சுமி, சந்தனமாரி, பியுலா கிரேஸ்கனி, ஊழியர்கள் சந்திரபுஷ்பம், சுமதி மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆசிரியை பென்சிமரகதம் நன்றி கூறினார்.