ஏரல் – குரும்பூர் சாலையை சீரமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு, ஏரல் முஸ்லிம் வணிகர் நலச் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சங்கத் தலைவர் எம்.பாக்கர் அலி, தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: தூத்துக்குடி மாவட்டத்தில் வணிக நகரமான ஏரலைச் சுற்றி30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. ஏரல் – குரும்பூர் பிரதான சாலை வழியாக தினமும், குரும்பூர், நாலுமாவடி, வனத்திருப்பதி, நாசரேத் உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிக அளவில் வாகனங்கள் இயக்கப்படுகிறது. இச்சாலை முற்றிலும் பழுதடைந்து மேடு, பள்ளமாக உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இச்சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.