ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிலுள்ள உறுப்பினர்களுக்கு சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி மாவட்ட ஆட்சியர் தகவல் ; 61 காலிப்பணியிடங்கள் ; விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கணக்கு துவங்க உதவவும், கடன் விண்ணப்பம் மற்றும் அதற்கான ஆவணங்களை தயார் செய்து வங்கிகளுக்கு அனுப்பவும், வங்கி கடனை முறையாக திருப்பி செலுத்த தேவையான ஆலோசனைகளை சுய உதவிக்குழு மற்றும் ஊராட்சிஅளவிலான கூட்டமைப்புகளுக்கு வழங்கி வங்கியினுடைய கடன் வசூலிக்கும் முகவராகவும், மாவட்டத்திலுள்ள முன்னோடி வங்கியின் நிதிக்கல்வி பணியினை சமுதாயம் வரை எடுத்துச் செல்லவும், ஒவ்வொரு கிராம தொகுப்பு அளவிலும் மதிப்பூதிய அடிப்படையில் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம் செய்ய தெரிவிக்கப்பட்டுள்ளது. சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் அனைத்து கூட்டமைப்பின் கீழ் செயல்படும் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கும் வங்கிகளுக்கும் இணைப்பு பாலமாக செயல்படுவார்கள்.
மேற்படி பணிக்கு தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 12 வட்டாரங்களில் ஒரு தொகுதி அலுவலகத்திற்கு 2 சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் வீதம் கீழ்க்கண்ட விபரப்படி 61 காலிப்பணியிடங்கள் உள்ளன.
மேலும், புதூர் வட்டாரத்தில் நாகலாபுரம், புதூர், மேலக்கரந்தை தொகுதி அலுவலகங்களுக்கும், கயத்தார் வட்டாரத்தில் கயத்தார், காமநாயக்கன்பட்டி, வானரமுட்டி தொகுதி அலுவலகங்களுக்கும், கோவில்பட்டி வட்டாரத்தில் கோவில்பட்டி, எட்டையாபுரம், இளையரசனேந்தல் தொகுதி அலுவலகங்களுக்கும், ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் ஓட்டப்பிடாரம், பசுவந்தனை, ஒட்டநத்தம், குறுக்குச்சாலை அலுவலகங்களுக்கும், விளாத்திகுளம் வட்டாரத்தில் விளாத்திகுளம், குளத்தூர், சிவஞானபுரம் தொகுதி அலுவலகங்களுக்கும், தூத்துக்குடி வட்டாரதை;தில் குமாரகிரி, கோரம்பள்ளம் தொகுதி அலுவலகங்களுக்கும், ஆழ்வார்திருநகரி வட்டாரத்தில் அங்கமங்கலம், ஸ்ரீவெங்கடேசபுரம் தொகுதி அலுவலகங்களுக்கும், சாத்தான்குளம் வட்டாரத்தில் நடுவக்குறிச்சி, தச்சமொழி தொகுதி அலுவலகங்களுக்கும், திருவைகுண்டம் வட்டாரத்தில் சிறுதொண்டநல்லூர், பழையகாயல், திருப்புளியங்குடி தொகுதி அலுவலகங்களுக்கும், திருச்செந்தூர் வட்டாரத்pல் திருச்செந்தூர் தொகுதி அலுவலகத்திற்கும் மற்றும் உடன்குடி வட்டாரத்தில் மெஞ்ஞானபுரம் மற்றும் செட்டியாபத்து தொகுதி அலுவலகங்களில் காலியாக சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு கீழ்காணும் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர்
சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்:
1) ஊராட்சி அளவிலான கூட்டமைப்பைச் சார்;ந்த குழு உறுப்பினராக இருத்தல் வேண்டும், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினராக இருத்தல் வேண்டும்
2) தேர்வு செய்யப்பட்ட வேண்டிய உறுப்பினர் அதே பகுதியைச் சார்ந்தவராக இருத்தல் அவசியம்.
3) மக்கள் நிலை ஆய்வில் கண்டறியப்பட்ட இலக்கு மக்கள் ;பட்டியலில் உள்ளவராக இருத்தல் வேண்டும்.
4) விண்ணப்பிக்கும் நாளில் 35 வயதுக்கு கீழ் இருத்தல் வேண்டும்.
5) 12-வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நன்றாக எழுதப்படிக்க மற்றும் கணக்கிடும் திறன் உடையவர்களாகவும் இருத்தல் வேண்டும்.
6) நல்ல தகவல் தொடர்பு திறன் உடையவர்களாக இருத்தல் வேண்டும்.
7) கிராமத்திலிருந்து அருகாமையிலுள்ள வங்கிகளுக்குச செல்ல விருப்பம் உள்ளவர்களாக இருத்தல் அவசியம்.
8) கணினி திறன் உடையவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
9) கைபேசி வைத்திருப்பவர்களாகவும் அதை இயக்கி குறுந்தகவல் அனுப்பவும்,பெறவும் திறனுடையவர்களாகவும் இருத்தல் அவசியம்.
10) விண்ணப்பத்தில் இலக்கு மக்களின் (ஏழை/மிகவும் ஏழை) எண்ணை கண்டிப்பாக எழுத வேண்டும்.
எழுத்து தேர்வில் மாவட்ட தேர்வுக்குழுவினரால் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்ட ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளே பணி நியமன உத்தரவு வழங்கி நியமனம் செய்யப்படும். பணி நியமனம் செய்யப்பட்ட சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்களுக்கு மாதம் ரூ.2000ஃ- மதிப்பூதியம் வழங்கப்படும்.
மேற்கண்ட நிபந்தனைகளின்படி, தகுதியான நபர்கள் தங்களின் விண்ணப்பங்களை 15.03.2018-க்குள் கீழ்காணும் முகவரிக்கு கூட்டமைப்பின் பரிந்துரையுடன் தபால் மூலமோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்கப்பட வேண்டும். 19.03.2018 அன்று காலை 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சியரகத்தில் தகுதி வாய்ந்த விண்ணப்பத்தாரருக்கு எழுத்து தேர்வு நடைபெறும்.
இணை இயக்குநர் / திட்ட இயககுநர்
மகளிர் திட்டம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 2வது தளம்,
மாவட்ட ஆட்சியரகம், கோரம்பள்ளம்,
தூத்துக்குடி-628101.
அலுவலக தொலைபேசி எண்:0461-2341282