கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் இராமனுஜம்புதூரில் நடந்தது.
கடந்த ஒரு வருட காலமாக கிள்ளிகுளம் வேளாண்மை கலலூரி முதல்வர் ராமலிங்கம் ஆலோசனையின் பேரில் இராமனுஜம்புதூரில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடந்து வருகிறது. இந்த முகாமில் மாணவிகள் 8 குழுவாகவும், மாணவர்கள் 3 குழுவாகவும் இராமனுஜம்புதூர் முன்னேற்றத்திற்கான கணக்கெடுப்பு நடத்தி வந்தனர். இரண்டாம் கட்டமாக இராமனுஜம்புதூரில் உள்ள சக்கரத்தாழ்வார் ஆலயத்தின் சுற்று பகுதியை அவர்கள் சுத்தம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை நாட்டுநலப்பணி திட்ட அலுவலர்கள் முனைவர் இராஜபாபு, முனைவர் சோபா ஆகியோர் செய்திருந்தனர்.


