ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள நவதிருப்பதிகளில் ஒன்பதாவது திருப்பதியான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோவிலில் மாசித்திருவிழா ஆண்டு தோறும் பக்தர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி இந்தாண்டிற்கான மாசித்திருவிழா கடந்த 24 ஆம்தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. கொடியேற்றத்தினை தொடர்ந்து தினமும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. கொடியேற்றத்தினைத் தொடர்ந்து 28ஆம் தேதி இன்று கருட சேவை நடைபெற்றது.
இதில், எம்பெருமானார்பேரருளாளர்ஜீயர்சுவாமிகள், கோவில் செயல்அலுவலர் விஸ்வநாத், ஸ்ரீவைகுண்டம் கோவில் ஸ்தலத்தார்ராஜப்பா வெங்கடாச்சாரி மற்றும் பக்தர்கள் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர். மார்ச் 4ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருவிழாவின் முக்கியநிகழ்வான திருத்தேர் திருவிழாவும், 5ம்தேதி (திங்கட்கிழமை) தெப்பத்திருவிழாவும், அதனைத் தொடர்ந்து 6ம்தேதி (செவ்வாய்கிழமை) நம்மாழ்வார் ஆச்சார்யர்கள் தெப்பமும், 7ம்தேதி (புதன்கிழமை) மாசி தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.