ஆழ்வார்கற்குளத்தில் உடைந்த பாலத்தினை கட்ட கோரி வருகிற 25 ந்தேதி ஸ்ரீவைகுண்டம் தாலூகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
கருங்குளம் ஒன்றியம் ஆழ்வார்கற்குளத்தில் மருதூர் கிழக்காலில் மிகவும் பழமையான பாலம் ஒன்று இருந்தது. இந்த பாலம் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு லாரி ஒன்று சென்ற போது இடிந்துவிழுந்து விழுந்து விட்டது. இதில் விபத்துக்குள்ளான லாரி டிரைவர் பலியானார். அதன் பின் இந்த இடத்தில் பாலம் கட்டப்படவில்லை. இதுகுறித்து ஊர் பொதுமக்கள் தொடர்ந்து மாவட்ட நிர்வகாத்திடம் புகார் மனு அளித்து வந்தனர். இதற்கிடையில் மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கருங்குளம் ஒன்றிய குழு சார்பில் கடந்த 10 ந்தேதி ஆர்ப்பாட்டம் அறிவித்தனர். இதற்கிடையில் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சந்திரன் தலைமையில் கடந்த 3ந்தேதி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் இந்த பாலம் கட்ட 1 கோடியே 18 லட்சத்து 58 ஆயிரத்து ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணி பொதுப்பணித்துறை முலமாக நடைபெறவுள்ளது. மேலும் இதற்கான பணி 8 ந்தேதி தற்காலிக பாலம் அமைக்கப்படும் என அறிவித்தனர். இதனால் பொதுமக்கள் போராட்டத்தினை ஒத்தி வைத்தனர். ஆனால் பணி துவங்க வில்¬ல் இதுகுறிதது மார்கிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் அப்பாக்குட்டி கூறும்போது, ஆழ்வார்கற்குளம் மக்ககளுக்கு விவசாயம் உள்பட பல பணிகளுக்கு இந்த பாலம் முக்கிய தேவை. ஆனால் அரசு பணம் ஓதுக்கீடு செய்தும் மழைக்காலத்துக்கு முன்பு அமைக்க நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே வருகிற 25ந்தேதி ஸ்ரீவைகுண்டம் தாலூகா அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவோம்’ என்று அவர் கூறினார்.
மழை காலத்துக்குள் இந்த பாலத்தின் பணியை அமைக்க வேண்டும் என ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.