திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி தமிழ்த்துறை சார்பில் இதழ்களில் எழுதுவது எப்படி? என்னும் தலைப்பில் மாணவர்களுக்கான ஒருநாள் பயிற்சி பட்டறை நடந்தது. கல்லூரி இளநிலை, முதுநிலைபட்ட மாணவர்களுக்காக நடத்தப்பட்ட இப்பயிற்சிப் பட்டறைக்கு கல்லூரி முதல்வர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். தமிழ்த்துறைத் தலைவர் கதிரேசன் வரவேற்று பேசினார். கல்லூரி செயலர் கோபாலகிருஷ்ணன் பயிற்சி பட்டறையை தொடங்கி வைத்து பேசினார். எழுத்தாளர்கள் நெல்லை கவிநேசன், நாராயணராசன், முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோர் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர். இதழ்களில் செய்திகள், துணுக்குகள், கட்டுரைகள், கதைகள், கவிதைகள் உள்ளிட்டவைகளை எழுதுவதற்கு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பட்டறையில் பங்கேற்ற 70 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. பேராசிரியை எழிலி நன்றி கூறினார். இதில், பேராசிரியர்கள் ராஜேஷ், மகேஷ்வரி, ராஜசெல்வி, சுந்தரவடிவேல், தணிகாசலம், சேதுராமலிங்கம், மகேந்திரன், ரமேஷ், மாலைசூடும் பெருமாள், மருதையா பாண்டியன், பயின்றோர் கழக பொருளாளர் பகவதி பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.