
ஆதிச்சநல்லூர் ஸ்ரீவேம்பு ஷீரடி சாய்பாபா அறக்கட்டளை சார்பில் முருக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு காக்கட ஆரத்தி, காலை 6 மணிக்கு 108 சங்காபிஷேகம் சிறப்பு ஆரத்தி பாபாவுக்கு நடந்தது. மதியம் 12 மணிக்கு மாலை 6 மணிக்கும் இரவு8 மணிக்கும் ஆரத்தி நடந்தது. அதன் பின் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு நடைபயணமாக செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சாய் மாரியப்பன் தலைமையில் ஸ்ரீவேம்பு ஷீரடி சாய்பாபா அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.