ஆசீர்வாதபுரம் குருகால்பேரி றி.என்.டி.றி.ஏ மேல்நிலைப் பள்ளியில் பாலியல் வன்முறை குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு, திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சாந்தி தலைமை வகித்தார். தலைமைக் காவலர் சந்திரிகா, அனைத்து மகளிர் காவல் நிலைய சட்ட குழு ஆலோசகர் வழக்குரைஞர் சாத்ராக், மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்க மாநில அமைப்பாளர் இசக்கிமுத்து, ஓய்வுபெற்ற ஆசிரியர்ஜெயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளித் தலைமை ஆசிரியர் ஆசிர் பெனிடிக்ட் சாம்ராஜ் வரவேற்றார். ஆசிரியர் சோபார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
முகாமில் குழந்தைகள் மீதான பாலிலியல் வன்முறைகள், குழந்தைகள் உரிமைகள் சட்டங்கள், சைபர்கிரைம் குற்றங்கள், மன அழுத்தம் காரணமாக தற்கொலைகள் தடுத்தல், தற்கொலை எண்ணத்தையும் தவிர்க்க பயிற்சி அளிக்கப்பட்டன.