மணிமுத்தாறு 3 வது ரீச் பகுதியான சேரகுளம், அரசர்குளம், புதுக்குளம், வல்லகுளம், மல்லல், இராமனுசம்புதூர், தெற்கு காரசேரி, கிளாக்குளம் உள்பட பகுதியில் தற்போது நெல் அறுவடை நடந்து வருகிறது.
குறிப்பாக இந்த வருடம் தமிழக முதல்வர் மணிமுத்தாறு நான்கு ரீச்சுக்கும் தண்ணீர் விடப்படும் என அறிவித்து இருந்தார். முதல் இரண்டு ரீச்சுக்கும் சரியான முறையில் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் மூன்று மற்றும் நான்காவது ரீச்சுக்கு சரிவர தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் குளத்தில் தண்ணீர் நிரம்பவில்லை. ஆயினும் கூட விவசாயிகள் கிணற்று தண்ணீரை வைத்தும், குளத்தில் மடை ஏறாமல் கிடந்த தண்ணீரை மோட்டார் மூலம் இறைத்தும் பயிர்களை காப்பாற்றி வந்தனர். தற்போது அறுவடை நடந்து கொண்டிருக்கிறது. பயிர்கள் 1 மேனி விளைந்தாலே போதும் என்று நினைத்திருந்த விவசாயிகளுக்கு தற்போது 2 மேனி போனாஸாக கிடைத்தது. இதனால் விவசாயிகள் சந்தோஷம் அடைந்தனர். ஆனால் விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்க வில்லை. இதனால் விரகத்தி அடைந்துள்ளனர். பாதுகாத்து சிறப்பு அறுவடை செய்தும் விலையில்லையே என வேதனைஅடைந்துள்ளனர். இதனால் அரசே விவசாயிகளின் நெல் பயிரை கொள் முதல் செய்து அதிக விலை கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.