தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோகிளப் சார்பில் படுக்கப்பத்து அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு டெலஸ்கோப் பயிற்சி நடந்தது.
தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வானவியல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.சாத்தான்குளம் அருகே உள்ள படுக்கப்பத்து அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட அஸ்ட்ரோ கிளப் செயலாளர் முத்து முருகன் தலைமை வகித்தார்.
பள்ளி உதவி தலைமையாசிரியர் விமலா ராணி முன்னிலை வகித்தார், திருநெல்வேலி மண்டல ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி கலந்து கொண்டு தொலைதூர பொருட்களை டெலஸ்கோப்பில் பார்வையிடுதல்,மற்றும் வானவியல் குறித்து பயிற்சி அளித்தார். மாணவர்களுக்கு நிறமாலை குறித்த விழிப்புணர்வு அட்டைகள் வழங்கப்பட்டது.
மாணவர்கள் டெலஸ்கோப் மூலம் தொலைதூரப் பொருட்களை கண்டு வியந்தனர். இதில் ஆசிரியர் வேல்துரை, சத்துணவு அமைப்பாளர் ஜெனிபர், பள்ளி மேலாண்மை குழு தலைவர் சங்கீதா ஆனந்தி, மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் செல்வி, ராஜலட்சுமி உள்பட பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்


