கருங்குளம் ஒன்றியம் அரசர்குளம் கிளாக்குளத்தில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஊககத்தொகை வழங்கப்பட்டது.
கருங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார அளவிலான காசநோயாளிகள் மற்றும் மருந்து அளிப்பவர்களுக்கான மாதாந்திர கூட்டம் நடந்தது. உதவி மருத்துவ அலுவலர் டாக்டர்முகம்மது ரிபான் தலைமை வகித்தார். காசநோய் மைய மாவட்ட நலக்கல்வியாளர் தங்கவேல் முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர் சீனிவாசன் வரவேற்றார்.
இதில் காசநோய்ககு மருந்து அளித்த அரசர்குளம் மற்றும் கிளாக்குளம் அங்கன்வாடி பணியாளர்களுக்கு அரசின் ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. நம்பிக்கை மைய ஆய்வக நுட்பநர் எல்சி நன்றி கூறினார். எக்ஸ்ரே நுட்பநர் குமாரதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல் ரஹீம் ஹீரா செய்திருந்தார்.