முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய தேரிக்காட்டு ஜமீன்களின் வரலாறு [kindle book]என்ற நூல் வேண்டுவோர். கீழ்கண்ட லிங்கில் சென்று ஆடர் செய்ய வேண்டுகிறோம். அதில் சென்று தாங்கள் பணம் செலுத்தி உங்கள் விலாகத்தினை பதிவிட்டால் உங்களை தேடி நூல் வந்து சேரும்.நம் தமிழ் மரபில் எழுதி வைக்கப்பட்டிருக்கும் கதைகளுக்குச் சிறிதும் இளைப்பில்லாமல், வழிவழியாக வார்த்தைகளால் சொல்லி வைக்கப்பட்டிருக்கும் கதைகள் ஏராளம்… ஏராளம்.
வீரத்தின் விளைநிலங்களாக விளங்கிய இந்தப் பாட்டுக் கதைகளின் நாயகர்களைப் பற்றிய வரலாறுகளைத் தேடிப்பிடிப்பது என்பது குதிரைக்கொம்பு மாதிரிதான். தன் பாட்டி சொன்ன ஜமீன் கதைகளின் தொடர்ச்சியாக, தேடித் தேடிப்போய் தென்னகத்தில் கடைசிகடைசியாய் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் கதைகளையும்… தாங்கள் இந்த ஜமீனின் வாரிசுகள் என்பதையே சொல்லாமல் மரபு மாறிக் கொண்டிருக்கும் சிலப்பல ஜமீன்களின் வரலாறுகளையும்… இந்தப் புத்தகத்தில் ஆவணமாய் வடித்திருக்கும் நூலாசிரியர் முத்தாலங்குறிச்சி காமராசு பாராட்டுக்குரியவர்.https://www.amazon.in/ebook/dp/


