திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தருவை கிராமம் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள அழகிய கிராமம். திருநெல்வேலி & சேரன்மகாதேவி மெயின்ரோட்டில் ஒய்யாரமாக அமைந்திருப்பது இந்த கிராமம். இந்த ஊரின் அருகில் தான் பச்சையாறு தாமிரபரணி ஆற்றில் சங்கமிக்கும் இடத்தில் நூற்றுக்கணக்கான பனைமரங்கள் நமது மனதை கொள்ளை கொள்ளும் அளவுக்கு மிகப்பிரமாண்டமாக இருக்கும். அதை பார்ப்பதற்கே கண் கோடி வேண்டும்.
தருவை பச்சையாற்றில் பார்க்கும் தூரத்தில் நீர் நிலை நிறைந்து ஷட்டர் போடப்பட்டிருக்கும் இடம் ஏதோ கதை சொல்கிறது என பல நாள்களாக இந்த வழியாக செல்லும் போது நினைத்திருக்கிறேன். அது உண்மைதான் என்பது போலவே அந்த ஷட்டர்ஸ் ஒரு பழம்பெரும் கதையை நம்மிடம் சொல்லிக் கொண்டுதான் இருந்து இருக்கிறது.


