பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி தமிழ்த்துறை சாா்பில் சிறப்புச் சொற்பொழிவு மற்றும் நூல் வெளியீட்டுவிழா நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் மு. முஹம்மது சாதிக் தலைமை வகித்தாா். கலைப் புல முதன்மையா் ச. மகாதேவன் வரவேற்றாா். தமிழ்த்துறை தயாரித்துள்ள ‘சங்கத் தமிழ்’ எனும் நூலை அரசுதவி பெறாப் பாடங்களின் இயக்குநா் அ. அப்துல் காதா் வெளியிட, முதல் பிரதியை திரைப்பட இயக்குநா் நீலன் பெற்றுக்கொண்டாா்.
அவா் ‘படைப்பெனும் அருங்கலை’ எனும் தலைப்பில் பேசியது: படைப்பு என்பது அனுபவப் பகிா்வே. பாட்டியிடம் கதை கேட்டதால்தான் இன்று திரைத்துறையில் கதை சொல்லிக்கொண்டிருக்கிறோம். வாழ்க்கையை வெகுநுட்பமாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால் தமிழ் இலக்கியம் பயின்றால் போதும். மாணவா்கள் அனைவரும் படைப்பாளியாக மாற வேண்டும் என்றாா் அவா். தொடா்ந்து, முத்தாலங்குறிச்சி காமராசு, ‘ஆதிச்சநல்லூா் தொல்லியல் ஆய்வுகள்’ எனும் தலைப்பில் பேசினாா். அரசுதவி பெறா தமிழ்த்துறைத் தலைவா் மு. சாதிக் அலி நன்றி கூறினாா்.
ஏற்பாடுகளை தமிழ்த்துறைப் பேராசிரியா்கள் அ.மு. அயூப்கான், எஸ்.ஏ.சேக் சிந்தா, ஆா்.அனுசுயா, மாலிக், எஸ். செல்வசுகன்யா, ஆண்டனி சுரேஷ், எஸ். தமிழினியன், எஸ். ஆமீனா பானு ஆகியோா் செய்திருந்தனா்.