இராமானுஜம்புதூரில் ஜெயலலிதா 72 வது பிறந்த நாள் விழா அமமுக சார்பில் கொண்டாடப்பட்டது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு அமமுக சார்பில் இராமானுஜம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கருங்குளம் ஒன்றிய செயலாளர் சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாநில மருத்துவரணி செயலாளர் கோசல்ராம் முன்னிலை வகித்தார். கருங்குளம் எம்ஜிஆர் மன்ற ஒன்றிய செயலாளர் மாயாண்டி பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்பு மற்றும் பள்ளி உபகரணங்கள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் கொம்பையா, தலைமை கழக பேச்சாளர் பூல்பாண்டி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் பரமசிவன், மீரான்குளம் ஊராட்சி ஒன்றிய இணைச்செயலாளர் முத்துக்குமார், கிளைச்செயலாளர்கள் மாயாண்டி, பகவான் முத்துப்பாண்டி மற்றும் மாயாண்டி, பூல்பாண்டி, வெள்ளத்துரை, அமச்சியார், கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


