களரி அடிமுறை பாகம் 2 – முத்தாலங்குறிச்சி காமராசு

399.00

Description

ஒரு நாடு எவ்வளவு வளங்களையும் செல்வ வளங்களையும் பெற்றிருந்தாலும் அவற்றை தன் எதிரிகளிடம் இருந்து காப்பாற்றிக் கொள்ள தனக்கென்று ஒரு போர்முறையையும் பயிற்சியையும் வைத்துக் கொள்வது அவசியம். முச்சங்கங்களை உருவாக்கி அதை 2000 ஆண்டுகளுக்கு மேலாக வளர்த்த தமிழர்கள் தனக்கென்று ஒரு போர்முறையை வடிவமைத்து கையாள்வதில் கைதேர்ந்தவர்கள் என்பது மிகையாகாது. அத்தகைய போர்களை பரவலாக களரி அடிமுறை சிலம்பம் குத்து வரிசை சிலாத்து வரிசை களரிப் பயிற்று கைபேர் என்று பல பெயர்களில் தமிழகம் கேரளா கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் பரவலாக பேசப்படுகிறது.

களரி அடிமுறை என்பது மிகவும் பழமையான ஒரு கலை தமிழர்களை என்பதை நாம் பல்வேறு சம்பவங்கள் கொண்டு நிரூபணம் செய்து வருகிறோம். அந்த வகையில் கடந்த பாகத்தில் களரி தோன்றிய கன்னியாகுமரி மாவட்டத்தை பற்றியும் களரி ஆசான்கள் பற்றியும் பட்டியலிட்டோம்.