அமெரிக்காவில் ஆத்தூர் விவசாயி – டாக்டர் சுதாகர் சிவசுப்பிரமணியம்

225.00

Description

நான் அமெரிக்கா திருநாட்டில் வசித்த நாட்களில் வாரம் ஒரு முறை பெற்றோர்களிடம் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அப்போது whatsapp கிடையாது. நிறுவனங்களுக்கு கணிசமான அளவு பணம் கட்டி தான் தொலைபேசியில் இந்தியாவில் உள்ளவர்களிடம் பேச வேண்டும்.

அதனால் தான் வாரம் ஒரு முறை என்ற கட்டமைப்பில் பெற்றோர்களுடன் பேசுவது வழக்கமாக இருந்தது. இன்றும் பசுமையான நினைவுகளாக என் உள்ளத்தில் அவை நிலை கொண்டுள்ளது. 2004 ஆம் ஆண்டு பெற்றோர்களிடம் பேசும்போது அப்பா மயங்கி விழுந்துவிட்டார்கள். சாப்பிட்ட பின்னர் சரியாகிவிட்டது என அம்மா நான்கு முறை கூறியது நினைவில் உள்ளது.

அப்போது என் தந்தைக்கு வயது 72 இருக்கும். அப்பாவிடம் அது பற்றி பேசினால் அது ஒன்றும் இல்லை. நான் உடலளவில் வலுவாக தான் உள்ளேன். நான் அமெரிக்கா வரலாமா இது சாத்தியமா என்று கேட்டார். அப்பா அமெரிக்காவிற்கு வருவதற்கு வருவது சற்று பயமாக இருந்தது.

இந்த பயணத்திற்கு காரணம் இரண்டு. ஒன்று தனியாக சுமார் இரண்டு நாட்கள் பல நாடுகளைக் கடந்து வர வேண்டும். ஏதாவது உடல் நலக்குறைவு என்றால் என்ன செய்வது? இரண்டு அமெரிக்காவில் ஆறு மாதங்கள் இருக்க வேண்டும். அந்த நேரத்தில் உடல்நல குறைவு ஏற்பட்டால் என்ன செய்வது. இது பற்றி என் தந்தையிடம் பேசினேன். அவர் எதுவும் ஆகாது நான் வலுவாக தான் இருக்கிறேன் என்றார். உடனே சரி வாங்க என்று எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தேன்.