Description
சித்து என்றால் உயிர். சித்தர் என்றால் உயிரினின் ரகசியம் அறிந்தவர் என்று பொருள்படும். ஆற்றல் பெற்றவரைச் சித்தி அடைந்தவர் என அழைப்பதுண்டு. மனதுக்கண் மாசிலானாகி செயற்கரிய செயல் புரிபவர் சித்தர்கள் . சித்தி எனும் சொல்லிற்குக் கை கூடல், முயற்சியில் வெற்றி என்பது பொருளாகும். ஐம்புலனை அடக்கும் சித்திகளில் சிறந்தவை எட்டு. அதை அட்டமா சித்தி என்று கூறுவர் . இந்த சித்தியில் பெயர் பெற்றவர் வல்லநாடு சுவாமிகள். அவர் தன் உடலை தனித்தனியே பிரித்து காட்டி அற்புதம் செய்துள்ளார். ஒரு சிறிய கிராமமான வல்லநாட்டருகே பாறைக்காட்டில் பிறந்த மனிதர், மகானாக மாறித் தம் அருட்செயலால் மக்களிடையே வளர்ந்த ஆன்மிகச் சிந்தனையை வெளிப்டுத்துவதும், சித்தர் எனப் பறைசாற்றாது சித்தி பெற்றதை வெளிப்படுத்தியதையும் இந்த நூலின் இதன் ஆசிரியர் முத்தாலங்குறிச்சி காமராசு விவரித்திருக்கிறார்.
பக்கம் 216 விலை 260/-