Description
சாத்தான்குளம் பகுதியில் வாழ்ந்த குறுநில மன்னர் சாத்தன் சாம்பவன். இவர் வரலாற்றை ஏற்கனவே எழுத்தாளர் தேரிக்காடு ஜமீன்தார்கள் என்ற வரலாற்று நூலை எழுதியுள்ளார். இந்த நூல் தமிழ் திசை இந்து பதிப்பகம் மூலமாக வெளி வந்துள்ளது. தற்போது சாத்தன் என்பது அவரது கதையின் புனைவு. சாத்தன் சாம்பவன் துடிப்பு மிக்க இளைஞன். சாத்தான்குளம் பகுதி மரிக்கொழுந்த நல்லூராக இருந்த போது இவ்வூர் செழிக்க குளங்களை வெட்டியவன். அவனது அரண்மனையில் செல்வம் செழிப்பாகப் பொங்கி வழிந்தது. பிற்காலததில் அவனது காதல் மனைவியின் உறவினர்களால் படுகொலை செய்யப்பட்ட அவனின் மூச்சுக் காற்று தற்போதைய சாத்தான்குளத்தில் மூலை முடுக்குகளில் எல்லாம் சுவாசமாக வீசுகிறது. . அவரின் சுவடுகள் சாத்தான்குளத்தில் நடுகல்லாகவும், அம்மன் கோயிலில் குலதெய்வ பூடமாகவும் அருள் தருகிறது. அவன் மட்டுமா? அவனின் கதல் துணைவியார் பாப்பாத்தி பெயரிலும் சுவடுகள் இன்று வரை சாத்தை நகரில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. பாப்பாத்தி பெயரைத் தனது குழந்தைகளுக்கு சூட்டி மகிழ்பவர்கள் பலர். மன்னன் சாத்தன் & பாப்பாத்தி காதலையும் சொல்லும் இந்த புனைவு, சாத்தனை நயவஞ்சகமாக பழிவாங்கும் போது கண்ணீர் வர வழைக்கிறது.சாத்தன் நாவல் மனதை விட்டு மறக்க முடியாத உண்மை சம்பவம்.