Description
(முற்றிலும் கலர் பக்கத்திலானது) தினத்தந்தி பதிப்பகத்துக்கு இந்நூல் 50 வது நூலாகும். முழுக்க முழுக்க கலர் பக்கத்தினால் இந்த நூல் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கடந்த 30 ஆண்டுகளாக தினத்தந்தியில் தொடர் எழுத வேண்டும் என ஆசைப்பட்டார். அந்த ஆசை அருள் தரும் அதிசய சித்தர்கள் தொடரால் பூர்த்தியானது. குற்றாலம் மௌன சுவாமிகள், இளையரசனேந்தல் பேப்பர் சுவாமிகள், காசிமேஜர்புரம் செண்பசாதுசுவாமிகள், பசுவந்தனை சங்கு சுவாமிகள், பாலாமடை நீலகண்ட தீட்சிதர், பனையூர் சித்தர்கள், நெல்கட்டும் செவல் ராமர்சுவாமிகள், சங்கரன் கோயில் வேலப்ப தேசிகர், குலசை ஞானியார் அடிகள், கொம்மடிக்கோட்டை வாலகுமாரசுவாமிகள், கீழப்பாவூர் பரதேசி சுவாமிகள், நெல்லை டவுண் அமாவாசை சித்தர், அண்ணாமலை புதூர் பெரியசாமி சித்தர், பாறைப்பட்டி சிவனய்யா சித்தர், வள்ளியூர் வேலாண்டி தம்பிரான், பரதேசி சித்தர், நெட்டூர் அப்பரானந்த சுவாமிகள், மாறந்தை ஸ்ரீசெட்டி சுவாமிகள், குற்றாலம் ஐந்தருவி சுவாமிகள், செங்கோட்டை ஆறுமுகசுவாமிகள், நவ்வலடி வேலாயுத சுவாமிகள், பண்பொழி சிவகாமி சித்தர் போன்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை இந்த நூலில் பதிவிட்டுள்ளார். இந்தநூல் மிகவும் பிரசித்தி பெற்ற நூல். அனைத்து ஆன்மிக மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
( இரண்டாவது பதிப்பு வெளிவர உள்ளது.)