மணக்கரை மலைப்பார்வதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடந்த மாட்டுவண்டிகள் பந்தயத்தில் மருகால்குறிச்சி வண்டி அபார வெற்றி பெற்றது.
வல்லநாடு அருகே மணககரை மலை பார்வதி அம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி போட்டி நடந்தது. இதில் 9 பெரிய மாட்டு வண்டிகளும், 26 சிறிய மாட்டு வண்டிகளும், 10 குதிரை வண்டிகளும் கலந்து கொண்டன. மணக்கரை பஸ்நிலையம் முன்பு துவங்கிய இந்த போட்டியில் வல்லநாடு வரை 10 கிலோ மீட்டர் தூரம் நிர்ணயிககப்பட்டது. பெரிய மாட்டு வண்டி, சிறிய மாட்டு வண்டி, குதிரை வண்டி என காளைகள் வண்டியோடு சீறிப்பாய்ந்து சென்றன. இந்த போட்டிகளை காண அருகில் உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமானோர் சாலை ஓரம் ஆங்காங்கே நின்று இருந்தனர். அனந்தநம்பிகுறிச்சி, கிள்ளி குளம், மியான்பள்ளி, மணககரை ஆகிய பகுதியில் பொதுமககளை கட்டு படுத்த போலிசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.
பெரிய மாட்டு வண்டியில் முதல் பரிசை மருகால்குறிச்சி சுப்பம்மாள் மாட்டு வண்டியும், இரண்டாம் பரிசை நாலாந்தலை உதயம் முத்துப்பாண்டி மாட்டு வண்டியும், மூன்றாம் பரிசை வேலங்குளம் கண்ணன் மாட்டு வண்டியும் பெற்றது. சிறிய மாட்டு வண்டி போட்டியில் முதல் பரிசை கயத்தாறு நாச்சியார் மாட்டுவண்டியும், இரண்டாம் பரிசை மருகால்குறிச்சி சுப்பம்மாள் மாட்டு வண்டியும், மூன்றாம் பரிசை வடக்கு காரசேரி ஓட்டக்காரன் மாட்டு வண்டியும் பெற்றன. குதிரை வண்டியில் முதல் பரிசை மணக்கரை வள்ளிநாயகம் குதிரைவண்டியும், இரண்டாம் பரிசை அபினாபேரி நிவேதாகுட்டி குதிரை வண்டியும், மூன்றாம் பரிசை கால்வாய் முத்து குதிரை வண்டியும் பெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா மணக்கரை திடலில் நடந்தது. அதிமுக கருங்குளம் ஒன்றிய செயலாளர் செங்கான், ஒட்டப்பிடாரம் முன்னளாள் எம்.எல்.ஏ சுந்தர்ராஜன், மணக்கரை திருப்பதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை மணக்கரை மலைப்பார்வதி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மணக்கரை ஊர் மக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை முறப்பநாடு காவல்துறையினர் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் எஸ்.ஐ.சுரேஷ்குமார் மற்றும் போலிசார் செய்திருந்தனர்.